சீனாவின் வர்த்தகப் பாதை மற்றும் பட்டுச்சாலை திட்டத்தில் இருந்து விலகுவதாக இத்தாலி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சீனாவிடம் முறைப்படி அடுத்து வரும் நாட்களில் கடிதம் அளிக்கப்படும் என்று இத்தாலி அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் சீனாவின் இலட்சியத் திட்டத்தில் பலமாதங்களாக இழுபறியில் இருந்த இத்தாலியின் பங்கேற்பு குறித்து நீடித்துவந்த சந்தேகம் உறுதியாகியுள்ளது.
இத்திட்டத்தில் சேராத சில நாடுகள் சீனாவுடன் நல்லுறவில் நீடிப்பது போல இத்தாலியும் நீடிக்கும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.