காசாவின் வருங்காலங்களில் ஏற்படும் சரிவுகள் குறித்து ஐ.நா. செயலர் குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 99 ஐ மேற்கோள் காட்டி அவர் எழுதி உள்ள கடிதத்தில் ,மனிதாபிமான அமைப்பு முற்றிலுமாக சரிந்து விட்டதால், காஸாவில் பொது ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என தாம் எதிர்பார்ப்பதாக குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
தற்போதைய நிலைமை பாலஸ்தீனர்களுக்கு மீளமுடியாத துயரத்தை ஏற்படுத்தும் என்றும் அதனை எந்த நிலையிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலக நாடுகள் தங்களின் சக்தியை பயன்படுத்தி இதனை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.