தென்கொரியாவின் முதலாவது உளவு செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தென்கொரியா உள்நாட்டிலேயே தயாரித்த செயற்கைக்கோளுடன் SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் வெள்ளியன்று கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.
ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வின் வீடியோவை எலோன் மஸ்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் வடகொரியா தனது சொந்த ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவிய நிலையில், பாதுகாப்பு கருதி தென்கொரியாவும் செயற்கைக்கோளை செலுத்தியுள்ளது.