பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை ஹமாஸ் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நேதான்யாகு ஒப்புக் கொண்டிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
ஹமாசுடன் இஸ்ரேல் போர் தொடுத்த பின் நான்காவது முறையாக பிளிங்கென் இஸ்ரேலுக்குப் பயணித்து நேதான்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காசாவில் சண்டை நிறுத்தத்தின் ஏழாவது நாளை குறிப்பிட்ட அவர் தொடர்ந்து பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருவதாகக்கூறினார்.
அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய கொடூரத் தாக்குதலால் பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு முழு உரிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 3 அப்பாவிகளை ஹமாஸ் அமைப்பினர் சுட்டுக் கொன்றதையும் பிளிங்கென் சுட்டிக்காட்டினார்.