அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக சுமார் ஆயிரம் புலம்பெயர்ந்தோர் மெக்ஸிகோவின் வேராகுரூசு பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
வட அமெரிக்க நாடுகளில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வால் மெக்ஸிகோ, கியூபா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்காக நடந்து எல்லைப்பகுதியை வந்தடைந்தனர்.
அவர்களுக்கு அமெரிக்கா உரிய அனுமதி வழங்காத நிலையில், எல்லையில் காத்திருப்போருக்கு உள்ளூர் மக்கள் உணவு அளித்து தங்குவதற்கு ஏற்பாடு செய்துக் கொடுத்துள்ளனர்.
தாங்கள் அமெரிக்க அரசுக்கு சுமையாக இருக்க மாட்டோம், எங்களுக்கு அங்கே உழைக்க அனுமதி வழங்க வேண்டுமென புலம்பெயர் மக்கள் தெரிவித்தனர்.