காசாவின் சுகாதார தேவைகள் அபரிமிதமாக அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், தற்போது காசாவில் மூன்றில் ஒருபகுதி மருத்துவ தேவைகள் மட்டுமே பெற முடிவதாக கூறியுள்ளார்.
நிரந்தர, போர் நிறுத்தம் மூலமே பொதுமக்களின் மருத்துவ தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு அவர்களின் துன்ப துயரங்களுக்கு முடிவு கட்டப்படும என்றும் டெட்ரஸ் அதனம் தெரிவித்துள்ளார்.