ஹமாஸ் அமைப்பினருக்கு நிதித் திரட்டுவதில் துருக்கி முன்னிலை வகிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து இஸ்தான்புல்லில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தீவிரவாத நிதித்தடுப்பு மற்றும் உளவுத்துறையின் உயர் அதிகாரி பிரயன் நெல்சன் இஸ்ரேலுக்கு எதிரான யுத்தத்தில் ஹமாசுக்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஹமாசை தீவிரவாத இயக்கமாக துருக்கி ஏற்கவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.