தென்கொரிய அரசு நாய் இறைச்சிக்குத் தடை விதித்ததை கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி நாய் பண்ணை உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணி சென்றனர்.
இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பதற்கு அண்மையில் தடை விதிக்க சட்டம் இயற்றிய தென்கொரிய அரசு, நாய் பண்ணை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்தது.
அந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் நாய் பண்ணை உரிமையாளர்கள், 20 லட்சம் நாய்களை சாலைகளில் அவிழ்த்துவிடப்போவதாக மிரட்டிவருகின்றனர்.