அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர், கனெக்டிகட்டில் உள்ள தனது இல்லத்தில் 100-ஆவது வயதில் காலமானார்.
ரிச்சர்டு நிக்ஸன் மற்றும் ஜெரால்ட் ஃபோர்டு ஆகியோர் அமெரிக்க அதிபர்களாக இருந்தபோது வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் பணியாற்றினார்.
வியட்நாமில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவதற்கு முக்கியப் பங்காற்றியதற்காக, இவருக்கும் வியட்நாமின் லீ டக் தோ இருவருக்கும் 1973-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1977-ல் அரசுப் பதவியில் இருந்து விலகினாலும், தீவிர அரசியலில் அவர் ஈடுபட்டு வந்தார். சீனாவுடனான உறவை வலுப்படுத்தும் வகையில் கடந்த ஜூன் மாதம் அவர் அந் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவருக்கு வெளியுறவுக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆலோசனைகள் வழங்கினார்.