இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தற்காலிய போர் நிறுத்தம் ஓரளவுக்கு நிம்மதியை அளித்துள்ளதாகவும், விரைவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்படும் என காஸா பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தாங்கள் ஆசைப்படும் போருக்கு முந்தைய வாழ்க்கையை வாழ நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும், அதற்கு சர்வதேச நாடுகள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அக்டோபர் 7-ஆம் தேதி காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்தது.
தற்காலிக போர் இடைநிறுத்தம் காரணமாக, தினமும் ஏராளமான லாரிகளில் நிவாரணப் பொருள்கள் காஸா பகுதிக்குக் கொண்டுவரப்பட்டாலும் உணவு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.