பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாபின் பதிண்டாவைச் சேர்ந்த அம்ரித் பால் என்ற அம்ரித் கில் மற்றும் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்த ரியாசுதீன் ஆகியோரின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உத்தரப்பிரதேசத்தின் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், இருவரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
ஆட்டோ ஓட்டுநரான அம்ரித் கில் இந்திய ராணுவத்தின் டேங்குகள் பற்றிய தகவல்களை ஐஎஸ்ஐ க்கு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அம்ரித் பால் மற்றும் ரியாசுதீனை, தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர்.