பல்கேரியாவில் கடும் பனிமழை பொழிந்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று வானிலை நிலைய அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
கடும் பனிப்பொழிவும் சூறைக்காற்றும் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பல்கேரிய தலைநகர் சோபியாவுடன் மோன்டானாவை இணைக்கும் ஒரே பாதையான பெட்ரோஹன் பாஸ் பகுதியில் சாலைப் போக்குவரத்து கடும் நெரிசலை சந்தித்தது.
தலைநகர் சோபியாவில் பனிப்பொழிவால் சில மரங்களும் சாலைகளில் சாய்ந்துக் கிடந்தன.