கொலையை மையமாக கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த ஆர்வத்தில், ஆசிரியையை கொலை செய்த 23 வயது தென் கொரிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜங் யூ ஜங் என்ற அந்த பெண், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியைகளை தொடர்பு கொண்டு, தனது மகள் டியூஷன் படிக்க விரும்புவதாக கூறினார்.
அதில் 26 வயதான ஆசிரியை ஒருவர் டியூஷன் எடுக்க சம்மதம் தெரிவித்ததால், பள்ளி யூனிபார்ம் அணிந்து கொண்டு அவரது இல்லத்துக்கு ஜங் யூ ஜங் சென்றார்.
பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியையை நூறு முறை குத்தி கொலை செய்தார். பின்னர் உடல் பாகங்களை பையில் வைத்து வாடகை காரில் எடுத்துச் சென்று ஆற்றின் ஓரத்தில் வீசினார். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து பெண்ணை போலீசார் கைது செய்தனர்.