தென்கொரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் வறுத்த வான்கோழியை ருசித்தபடி தேங்ஸ் கிவிங் டேவை கொண்டாடினர்.
அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை நன்றி நவில்தல் நாளாக கொண்டாடப்படுகிறது.
தென்கொரியாவின் டாங்டூச்சியான் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமில், உயரதிகாரிகள் வீரர்களுக்கு விசேஷ உணவு வகைகளை பரிமாறினர்.
வடகொரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்க ராணுவ வீரர்கள் 28 ஆயிரம் பேர் அங்கு முகாமிட்டுள்ளனர்.