ஹமாஸ் போராளிகள் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளில் 50 பேர் அடுத்த நான்கு நாட்களுக்குள் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஹமாஸ் அமைப்புடன் உடன்பாடு செய்துகொள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள் என குழுக்கள் குழுக்களாக பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், அதற்குப் பதிலாக இஸ்ரேல் தரப்பில் போர் இடைநிறுத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 50 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக் கைதிகள் அனைவரையும் விரைவில் விடுவிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.