ஆப்ரிக்க நாடான லைபீரியாவில் புதிய அதிபரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்குள் கார் புகுந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர்.
18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் புதிய அதிபராக யுனைட்டி கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோசம் போகாயி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து தலைநகர் மான்ரோவியாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன்பாக தொண்டர்கள் வெற்றியை கொண்டாடினர். அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று தொண்டர்கள் கூட்டத்தில் புகுந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இந்த விபத்தின் வீடியோ முகநூலில் பகிரப்பட்டுள்ளது. இது விபத்தா அல்லது திடமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்