ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கான பரப்புரைகள் சூடு பிடித்துள்ளன.
ஆளும் அதிபர் பெலிக்ஸ் தலைநகர் கின்ஷாசாவில் 80,000 பேர் திரண்ட தியாகிகள் மைதானத்தில், தனது கூட்டணி ஆதரவாளர்களுடன், அதன் தலைவர்களின் உருவ பொம்மைகளை ஏந்தியவாறு பேசிய பெலிக்ஸ், தாம் இலவச அடிப்படைக் கல்வியை வழங்கியதாகவும், விரைவில் உலகளாவிய சுகாதார சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறி வாக்கு கோரினார்.