காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரஃபா என்ற இடத்தில் ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
மனிதாபிமான நோக்கங்களுக்கான இந்த தற்காலிக போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அமலில் இருந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த நேரத்தில் பொதுமக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறியதாகவும் கூறியுள்ள இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு வடக்கு காசா மீதான தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் அவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதை இஸ்ரேலிய வீரர்கள் தடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.