பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் குளிர்காலத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குக் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.
வனவிலங்கு சுற்றுச்சூழலை அடிப்படையாக வைத்து பாரீஸ் கார்டனில் இந்த மின்விளக்குக் கண்காட்சியை தேசிய அருங்காட்சியகம் அமைத்துள்ளது. இதில், எல்இடி வண்ண வண்ண மின்விளக்குகளால் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள புலி, மயில், யானை, மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகளை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
சுற்றுச்சூழலுக்கு வனவிலங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், விஞ்ஞானிகளின் உதவியுடன் ஒளிரும் வகையில் இந்த வனவிலங்குகளின் மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சீன நிறுவனத்தால் இந்த மின்விளக்கு அலங்காரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி வரை இந்த மின்விளக்குக் கண்காட்சி நடைபெற உள்ளதாகவும் அருங்காட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.