அன்டார்ட்டிகாவில் முதன்முறையாக நார்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் போயிங் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.
12 டன்கள் ஆய்வுக்கான பொருட்களுடனும் 45 விஞ்ஞானிகளுடனும் தென்துருவத்தில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தின் டிரால் விமான தளத்தில் இந்த விமானம் தரையிறங்கியது.
48 மணி நேரம் முன்பு இந்த விமானம் நார்வேயின் ஓஸ்லோவில் இருந்து தென்துருவத்திற்குப் புறப்பட்டது.
40 மணி நேர நீண்ட பயணத்துக்குப் பின் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனுக்கு வந்து அங்கிருந்து அண்டார்ட்டிகா சென்றடைந்தது.
வழக்கமான ஓடுதளம் இல்லாததால் சுமார் 3 ஆயிரம் மீட்டர் 60 அடி அகலமான நீலப் பனிப்பாதை ஓடுதளமாகப் பயன்படுத்தப்பட்டது.