ஒலியை விட 27 மடங்கு வேகமாக அணு ஆயுதத்தை தாங்கி செல்லும் அவன்கார்டு ஹைப்பர்ஸானிக் கருவியை ஏவுகணையில் பொருத்தி வெற்றிகரமாக பரிசோதனை செய்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் முன்பகுதியில் கூம்பு வடிவத்தில் உள்ள அவன்கார்டு ஹைப்பர்சானிக் கருவி, இலக்கை நெருங்கும்போது ஏவுகணையிலிருந்து பிரிந்து, மணிக்கு 34 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் என ரஷ்யா கூறியுள்ளது.
அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்புகளைத் தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கருவி இது என அதிபர் புடின் முன்னர் தெரிவித்திருந்தார்.