உலக நாடுகளின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் ஆசியான் அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், இது போருக்கான காலம் அல்ல என்றும், உலகில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தையும் நாடுகளுக்கிடையே இணக்கமான சூழல் நிலவுவதும் அவசியம் எனவும் தெரிவித்தார்.