காஸாவில் ஹமாஸ் அமைப்பினரின் அலுவலங்களை இஸ்ரேல் படையினர் தரைமட்டமாக்கினர்.
ஹமாஸ் போராளிகளின் சட்டமன்றக் கட்டடம் மற்றும் அரசு அலுவலங்களை இஸ்ரேல் படையினர் தாக்கி அழிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து முன்னேறிச் செல்லும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர், ஹமாஸ் போராளிகளின் ஆயுதத் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலையையும் கண்டு பிடித்துள்ளனர்.
இதில் ஏராளமான துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகள் இருந்ததையும் வீடியோ எடுத்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினர் தற்போது அதனை வெளியிட்டுள்ளனர்.