காசாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பதாகவும் அவர்களால் சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
டெல் அவிவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி சில புகைப்பட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரன்தீஸி மருத்துவமனையை தங்கள் படையினர் சோதனையிட்ட போது அங்கு ஹமாஸ் படையினர் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மருத்துவமனையின் அடித்தளத்தில் தற்கொலைப் படையினருக்கான ஆயுதங்கள் வெடிகுண்டுகள், ஏகே.47 துப்பாக்கிகள் போன்றவை கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இஸ்ரேல் பிணைக்கைதிகள் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்ததற்கான தடயங்களும் சிக்கியிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையாக சோதனையிட்டு நோயாளிகளை பாதுகாத்து வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது