ஹாலிவுட்டில் படத்தயாரிப்பு ஸ்டூடியோக்களுக்கும் நடிகர்களுக்கும் இடையே நீடித்து வந்த சம்பளப் பிரச்சினக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது.
கூடுதலான ஊதியம் கேட்டு நடிகர் சங்கம் ஜூலை மாதம் முதல் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வந்தது.
ஓடிடி தளத்தில் படங்களை வெளியிடுவதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு கேட்ட நடிகர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தங்களை படங்களில் இருந்து நீக்குவதிலிருந்து பாதுகாப்பும் கோரியிருந்தனர்.
இதையடுத்து வால்ட் டிஸ்னி, நெட்பிளிக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஹாலிவுட் நடிகர் சங்கப் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனால் மே மாதம் முதல் முடக்கப்பட்டிருந்த படப்பிடிப்புகள் முழுவீச்சுடன் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.