ஜப்பான் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் புதிய தீவு ஒன்று உருவாகி உள்ளது.
ஜப்பானின் தீவான ஐவோ ஜிமாவுக்கு அருகே ஏற்பட்ட இந்த வெடிப்பினால் 160 அடி உயரத்திற்கு எரிமலைக் குழம்புகள் தூக்கி வீசப்பட்டன.
திடீரென ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் சுமார் 330 அடி விட்டம் கொண்ட புதிய தீவு உருவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எரிமலை தொடர்ந்து வெடித்தால் இந்தத் தீவு நிரந்தரமாக இருந்து விடும் எனக் குறிப்பிட்டுள்ள அவர்கள், புதிய தீவு சிறியதாக தோன்றினாலும், அது நீருக்கடியில் 40 கிலோ மீட்டர் விட்டமும், இரண்டு கிலோ மீட்டர் உயரமும் கொண்டதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளளனர்.