இஸ்ரேலில் வேலை பார்த்து வந்த பாலஸ்தீன தொழிலாளர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்தியர்களை பணியில் அமர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு பணிநீக்கம் செய்யப்பட்ட பாலஸ்தீன தொழிலாளர்களுக்கு மாற்றாக, இந்தியர்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இஸ்ரேலின் கட்டுமானத் துறைக்கு 90 ஆயிரம் பாலஸ்தீனர்களுக்குப் பதிலாக ஒரு லட்சம் இந்தியர்களை அனுமதிக்கும்படி அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், மேலும் ஒப்புதலுக்காக இஸ்ரேலிய அதிகாரிகளின் முடிவுக்காக தற்போது காத்திருப்பதாகவும் இஸ்ரேலிய கட்டுமான அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.