உக்ரைனில் தற்போது நிலவும் போர்ச் சூழலில் அங்கு தேர்தல் நடத்துவது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டால் அதைவிட பொறுப்பற்றதன்மை வேறு இல்லை என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசிய அவர், தேர்தல் குறித்து அர்த்தமற்ற அரசியல் விவாதங்களுக்கு இது நேரம் அல்ல என்றும், அதைத் தவிர்ப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.
20 மாதங்களுக்கும் மேலாகப் போர் நடந்து வருவதாகவும், நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துள்ள சூழலில், அது குறித்துக் கவனம் செலுத்துவதுதான் இன்றைய அவசியத் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
உக்ரைனில் தற்போது அமலில் உள்ள ராணுவச் சட்டத்தினால் அங்கு தேர்தல் நடத்தத் தடை உள்ளது. இருப்பினும், வெளிநாட்டு நிதி உதவி கிடைத்து சிறப்பு ஏற்பாடுகள் மூலம் தேர்தல் நடத்தினால், மீண்டும் போட்டியிடுவது குறித்து ஜெலன்ஸ்கி பரிசீலித்து வந்த நிலையில், இத்தகைய கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.