இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அரசியல் தீர்வு காணப்பட்டால் மட்டுமே பாலஸ்தீன அதிகாரிகள் காசாவில் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியும் என்று பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசாவில் தற்போது உடனடி போர் நிறுத்தம் அவசியம் என்றார்.
அங்கு பலியாகும் மனித உயிர்களை காக்கும் விதமாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என பிளிங்கனிடம் கேட்டுக்கொண்டதாகவும் அப்பாஸ் கூறியுள்ளார்.