பாகிஸ்தானில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் மீன்பிடி நகரமான பாஸ்னி அருகே ராணுவத்தினர் சென்ற வாகனத்தைக் குறிவைத்து மறைந்திருந்த பயங்கவாதிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பலூசிஸ்தான் மாகாணத்தில் கனிம வளங்கள் சுரண்டப்படுவதாகக் குற்றம் சாட்டி பல்வேறு இனக்குழுக்கள் இருக்கும் நிலையில் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
2 நாட்களுக்கு முன் காவல்துறையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.