காஸா பகுதியில் இருந்து ரஃபா எல்லை வழியாக எகிப்து நாட்டுக்குச் செல்ல வெளிநாட்டினர் இரண்டாவது நாளாகக் குவிந்துள்ளனர்.
இஸ்ரேல், எகிப்து மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரஃபா சோதனைச் சாவடி நேற்று திறக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 320 வெளிநாட்டினரும், படுகாயமடைந்தவர்களும் வெளியேறினர்.
அடுத்த இரண்டு வாரங்களில் காஸா பகுதியில் இருந்து 7,500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.