காஸாவில் பிணை கைதிகளாக உள்ள 3 இஸ்ரேலிய பெண்களின் வீடியோவை ஹமாஸ் போராளிகள் வெளியிட்டுள்ளனர்.
அதில் பிரதமர் நேதன்யாஹுவின் கையாலாகாத தனத்தால் தாங்கள் ஹமாஸ் போராளிகள் வசம் சிக்கித்தவிப்பதாக சாடிய பெண் பிணைய கைதி ஒருவர், ஹமாஸ் கேட்டுக்கொண்டதைப்போல் பாலஸ்தீன கைதிகளை விடுவித்து தங்களை மீட்குமாறு வலியுறுத்தினர்.
பிணை கைதிகளை வைத்து, தங்களை உளவியல் ரீதியாக தாக்க ஹமாஸ் முயற்சித்துவருவதாகவும் இதற்கு தாங்கள் அஞ்சப்போவதில்லை என்றும் பிரதமர் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.