காஸா மீது வான் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதனை கண்டித்து மற்றொரு பாலஸ்தீன பகுதியான மேற்கு கரையில் ஏராளமான போராட்டங்கள் வெடித்தன.
போராட்டங்களை தூண்டி விடுவோரை கைது செய்வதற்காக ஜெனின் நகரில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டபோது அங்கிருந்த பாலஸ்தீனர்கள் கல் வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் வீரர்கள் பதிலுக்கு நடத்திய துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீனர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன இளைஞர்கள் பங்கேற்றனர்.