ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலிருந்து அடிலெய்டு நகரம் வரை 3,000 கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற சோலார் கார் ரேஸில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.
40 டிகிரி கோடை வெயில், கரடுமுரடான மலைப்பாதை, பாலைவனப் புழுதி காற்று என சவால்கள் நிறைந்த பாதை வழியாக 4 முதல் 5 நாட்கள் வரை இந்த பந்தயம் நடைபெறும் என கூறப்படுகிறது.
முன்னனி நிறுவனங்களின் கார்கள் மட்டுமின்றி பல்கலைக்கழக மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட கார்களும் பந்தயத்தில் பயன்படுத்தப்பட்டன.