இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் 16 லட்சம் பாலஸ்தீனர்கள் வீடுகளை விட்டு வெளியேவிட்டதாக ஐநா அமைப்பு கூறியுள்ளது.
ஐநா-வின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் உள்ள குடியிருப்புகளில் 40 சதவீதம் வீடுகள் தாக்குதலில் இடிந்துவிட்டதாக கூறியுள்ளது.
ஐநா குழுவினர் அமைத்துள்ள 148 முகாம்களில் 5 லட்சத்து 66 ஆயிரம் பாலஸ்தீனர்கள் தங்கியுள்ளதாகவும், அவர்களுக்கு போதிய உணவு, குடிநீர், மருந்து, மின்வசதி போன்றவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காசா நோக்கி செல்லுமாறு பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.
இதையடுத்து வடக்கு காசாவில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.