காசாவில் பள்ளிகள், மசூதிகள், ஐநா நிவாரண அலுவலகம் அருகே ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் ஏவு தளங்களை அமைத்திருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படை, அப்பாவி பாலஸ்தீன மக்களை கேடயமாக பயன்படுத்தி ஹமாஸ் உருவாக்கி இருந்த ராக்கெட் ஏவு தளங்களை அடையாளம் கண்டு அழித்ததாகவும் கூறியுள்ளது.
சயனைடு கலந்த ரசாயன வெடிகுண்டுகளை வீச ஹமாஸ் திட்டமிட்டதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
அண்மையில் கொல்லப்பட்ட ஹமாஸ் தீவிரவாதி ஒருவர் வைத்திருந்த கணினி பென் டிரைவ் ஒன்றில், 2003-இல் அல்காய்தா அமைப்பு உருவாக்கி இருந்த சயனைடு விஷத்தை பரப்பும் கருவி குறித்த விவரங்கள் இருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.