காஸாவிற்கான மின் இணைப்பை இஸ்ரேல் துண்டித்ததன் காரணமாக செல்போன்களை சார்ஜ் செய்ய முடியாததால், அங்குள்ள மக்களுக்கு உறவினர்கள் மற்றும் வெளி உலகத்தினருடான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளன.
ஒரு சில வீடுகளில் டீஸல் ஜெனரேட்டர்கள், கார் பேட்டரிகள் மற்றும் சூரியசக்தி மின்சாரத்தின் மூலம் செல்போன்களை சார்ஜ் செய்து ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்து வருவதாகவும் காஸா மக்கள் கூறியுள்ளனர்.