இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் போது பிணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தாய் மற்றும் மகளை ஹமாஸ் போராளிகள் விடுவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் எகிப்து வழியாக இஸ்ரேல் அனுப்பி வைக்கப்படுவதற்காக காசாவில் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இது பற்றி ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிணயக் கைதிகள் 200 பேரில் அமெரிக்காவை சேர்ந்த தாய்-மகள் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். மேலும் மனிதாபிமான அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர்..