ஐ.நா.வின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா கிராமங்களுக்கான பட்டியலில் குஜாரத் மாநிலத்தின் தோர்டோ கிராமம் இடம் பிடித்துள்ளது. இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள பூஜ் வட்டத்துக்குட்பட்ட தோர்டோ கிராமம், கட்ச் பாலைவனத்துக்கு புகழ்பெற்றதாகும்.
இயற்கை வளங்களை பேணுவது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு சிறந்த சுற்றுலா கிராமங்களை தேர்வு செய்துவருகிறது.
இந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட 54 கிராமங்களில் அதிகப்பட்சமாக சீனாவில் இருந்து 4 கிராமங்கள் இடம்பிடித்துள்ளன.