இஸ்ரேல் மற்றும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நிற்க அமெரிக்கர்களுக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் சென்று திரும்பிய அதிபர் ஜோ பைடன், ஓவல் அலுவலகத்திலிருந்து தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து மக்களுக்கு தெளிவுப்படுத்திய பைடன், ஹமாஸ் ஆயுத குழுவினரையும், ரஷ்யாவையும் ஒப்பிட்டு பேசினார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை மேற்கோள்காட்டி பேசிய அவர், ரஷ்ய அதிபர் புதினும், ஹமாஸ் அமைப்பினரும் வெவ்வேறு வகையான அபாயங்கள் என்றும், தங்களது அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழிக்க நினைப்பவர்கள் என்றும் கூறினார்.
இஸ்ரேல், உக்ரைன், தைவான் நாடுகளுக்கு உதவிகளை வழங்கவும், மெக்சிகோ எல்லை பாதுகாப்புக்கும் அவசரகால நிதியாக 100 பில்லியின் டாலர் தேவைப்படுவதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.