இஸ்ரேல் சென்றுள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சந்திப்பின் போது, ஹமாஸின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு, மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், உதவிகள் விரைவில் சென்றடைய வேண்டும் என்றும் ரிஷி சுனக் வலியுறுத்தினார்.
காசாவில் சிக்கியுள்ள பிரிட்டன் மக்களை மீட்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக், தானும், பிரட்டன் அரசும், இஸ்ரேலிய மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்தார்.