இஸ்ரேல் - ஹமாஸ் போரில், இஸ்ரேல் ராணுவத்துடன் அமெரிக்கா கைகோர்க்கும் என வெளியான தகவலை அதிபர் ஜோ பைடன் மறுத்துள்ளார்.
இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதற்காக இஸ்ரேல் வந்தேனோ அந்த பணி முடிந்ததாக தெரிவித்தார்.
காசாவிற்கான மனிதாபிமான உதவிகளை தடுத்து நிறுத்தக்கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் வலியுறுத்தியதாவும், இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் எனவும் தெரிவித்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து தெளிவுப்படுத்த, இன்று இரவு ஓவல் அலுவலகத்திலிருந்து நாட்டு மக்களுக்கு ஜோ பைடன் உரையாற்றவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.