அமெரிக்காவில் பிரபலமான பவர் பால் லாட்டரியில் 173 கோடி டாலர், அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 14 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத் தொகை ஒருவருக்கு கிடைத்துள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துள்ள இது, அமெரிக்க லாட்டரி வரலாற்றில் இரண்டாவது பெரிய தொகை இதுவாகும்.
பரிசுக்கான டிக்கெட்டை வைத்திருப்பவருக்கு முழு தொகையை பிரித்து ஆண்டுக்கு ஒருமுறை என்ற தவணையில் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
தேவைப்பட்டால் வரி பிடித்தம் போக மீத தொகையை வெற்றியாளர் மொத்தமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.