இஸ்ரேலுக்குள் பாராசூட் மூலம் தரையிறங்கிய ஹமாஸ் போராளிகள் சூப்பர்நோவா இசை விழா மேடையை சுற்றி கொடூரமாக நடத்திய தாக்குதலின் போது அங்கிருந்தவர்கள் தப்பித்து ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளது இந்த தாக்குதலில், 260 பேர் உயிரிழந்துள்ளனர்.
இசை விழாவில் பங்கேற்ற 23 வயது அமெரிக்க மகனைக் காணவில்லை என அவரது பெற்றோர் தவித்து வந்தனர். இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட அவரது மகன் அனுப்பிய செய்தியை சமூக வலைதளத்தில் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
அதில், ஐ லவ் யூ - மன்னிக்கவும் என்றும், தான் சொல்வதை கேட்க யாரும் தயாரில்லை என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் தீவிரவாதிகளால் மகன் கொல்லப்பட்டதை பெற்றோர் உறுதி செய்துள்ளனர். பிறந்த நாளின் போது தனது மகனுக்கு நேர்ந்த கதியால் பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.