இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களை முறியடிப்போம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது போர்தொடுத்துள்ள ஹமாஸ் குழுவினரை அழிக்க இஸ்ரேல் பாதுகாப்பு படைகளை முழு வலிமையோடு பயன்படுத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
குழந்தைகள், பெண்கள் உள்பட அப்பாவி மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தி படுகொலைகள் செய்து வரும் ஹமாஸ் ஒரு குரூரமான போரைத் தொடங்கியுள்ளதாகவும், இந்தப் போரில் வெற்றிக்காக கொடுத்துள்ள விலை மிகவும் அதிகம் என்றும் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இயங்கும் பதுங்கும் இடங்கள் தரைமட்டமாக்கப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.