ஆப்கன் நாட்டினரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் கடுமையான மனித உரிமை மீறல் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என பாகிஸ்தானை ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
17 லட்சம் ஆப்கன்கள் உட்பட தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகள் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு அண்மையில் கெடு விதித்திருந்து.
ஆப்கனிஸ்தானில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு ஆப்கனில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.