அமெரிக்காவில் கேன்சஸ் நகரில் 5 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குலுக்கு ஆளாகி கொல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாயாருக்கு அறிமுகமான நபர் கைது செய்யப்பட்டார்.
அந்த பெண் குழந்தை, தனது தாய் மற்றும் வேறு சில நபர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளது. அடிக்கடி கோபம் கொள்ளும் தாய், மகள் என்றும் பாராமல் 5 வயது சிறுமியை வீட்டை விட்டு விரட்டி அடித்தாக கூறப்படுகிறது.
இதனால் பொது இடத்தில் வேறு சிலருடன் தங்கியிருந்த சிறுமி, படுகாயத்துடன் காணப்பட்டதை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததை அடுத்து, குற்றம் தொடர்பாக மைக்கேல் செர்ரி என்ற நபர் கைது செய்யப்பட்டார்.