தென் சீன கடலில் முகாமிட்டுள்ள தங்கள் நாட்டு கடற்படையினருக்கு உணவு பொருட்களை எடுத்துச் சென்ற கப்பலை சீன கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தியதாக பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பிலிப்பைன்ஸுக்கு சொந்தமான அயுங்கின் கடற்பரப்பை சீனாவும் உரிமை கோரிவருகிறது. மீன் வளம் மிக்க இந்த கடற் பகுதியில் தங்கள் உரிமையை நிலைநாட்டும் விதமாக பிலிப்பைன்ஸ் ராணுவம், 1999-ம் ஆண்டு, பழைய போர் கப்பல் ஒன்றை தரை தட்டி நிறுத்தியது.
அந்த கப்பலில் தங்கிவரும் வீரர்களுக்கு தேவையானவற்றை எடுத்து சென்றபோது 4 கப்பல்களில் வந்து சீன கடலோர காவல் படையினர் வழிமறித்ததாகவும், அவர்களை மீறி சென்று பொருட்களை கொடுத்துவிட்டு வந்ததாகவும் பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.