சீனாவில் மது அருந்தும் போட்டி ஒன்றில் ஒரு லிட்டர் மதுவை 10 நிமிடங்களில் குடித்த தொழிலாளி மரணம் அடைந்தார்.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சென்சென் நகரில், தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் யாங் என்பவர், தமது தொழிலாளர்களை அழைத்து மது அருந்தும் போட்டிக்கு ஏற்பாடு செய்தார்.
சாங் என்ற தொழிலாளி உட்பட பலர் போட்டியில் பங்கேற்றனர். இந்திய ரூபாய் மதிப்பில் பந்தயத் தொகை 2 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டதை அடுத்து பைஜுஜு என்ற மது வகையை சாங் வேகமாக குடித்தார்.
10 நிமிடங்களில் ஒரு லிட்டர் குடித்து மயங்கி விழுந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.