இத்தாலியில் 50 அடி ஆழ பள்ளத்திற்குள் சுற்றுலா பேருந்து பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.
வெனீஸ் நகரில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 39 பேர் மார்கெரா மாவட்டம் நோக்கி அப்பேருந்தில் சென்றனர்.
மின்சாரம் மற்றும் மீத்தேன் வாயுவில் இயங்கக்கூடிய அந்த ஹைபிரிட் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மேம்பாலம் ஒன்றின் மேலிருந்து தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்திற்குள் பாய்ந்த பேருந்தின் பேட்டரிகள் தீப்பற்றி எரியத் தொடங்கின.
இதில் பயணிகள் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். அப்பகுதி மக்களும், மீட்பு குழுவினரும் பேருந்து கண்ணாடிகளை உடைத்து சிலரை மீட்டனர்.